ADDED : ஜூலை 18, 2024 04:31 AM
குள்ளஞ்சாவடி, : குள்ளஞ்சாவடி அருகே லாட்டரி சீட்டுகள் மற்றும் மதுபாட்டில்கள் விற்ற 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
குள்ளஞ்சாவடி போலீசார் நேற்று காலை சுப்ரமணியபுரம், குள்ளஞ்சாவடி, அப்பியம்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் ரோந்து சென்றனர். அதில் சுப்ரமணியபுரம், குள்ளஞ்சாவடி பகுதிகளில் அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகளை விற்ற, சேடப்பாளையம் மெயின் ரோடு பகுதியை சேர்ந்த, ரகு, 47; மகேந்திரகுமார், 46; ஆகிய இருவரை கைது செய்தனர். மதுபாட்டில் விற்ற அப்பியம்பேட்டையை சேர்ந்த ராஜ குணசேகர், 67; என்பவரை கைது செய்து, மூவர் மீதும் குள்ளஞ்சாவடி போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.