ADDED : ஜூலை 18, 2024 04:32 AM
குள்ளஞ்சாவடி குள்ளஞ்சாவடி அரசு மேல்நிலை பள்ளியில், கல்வி வளர்ச்சி நாள் விழா, அனைத்து மன்றங்களின் துவக்க விழா, சாதனை மாணவ, மாணவியர்களுக்கு பாராட்டு விழா ஆகிய முப்பெரும் விழா நடந்தது.
முதல் நிகழ்வாக காமராஜர் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது. தமிழ், ஆங்கிலம், கணிதம், அறிவியல், சமூக அறிவியல் என, அனைத்து மன்றங்களின் துவக்க விழாவும், பத்தாம் வகுப்பு மற்றும், பிளஸ்-2 தேர்வுகளில் சிறந்த இடங்களை பிடித்த மாணவர்களுக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.
தலைமை ஆசிரியர் கொளஞ்சியப்பன் தலைமை தாங்கினார். ஆசிரியர்கள் அமுதா, ராயப்பன், சக்திவேல், ஜெகத்ரட்சகன், விஸ்வநாதன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
உணவுகளை வீணாக்க கூடாது என்ற தலைப்பில் மாணவர்களால் பட்டிமன்றம் நடத்தப்பட்டது.