/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ 500 கிலோ பிளாஸ்டிக் சிதம்பரத்தில் பறிமுதல் 500 கிலோ பிளாஸ்டிக் சிதம்பரத்தில் பறிமுதல்
500 கிலோ பிளாஸ்டிக் சிதம்பரத்தில் பறிமுதல்
500 கிலோ பிளாஸ்டிக் சிதம்பரத்தில் பறிமுதல்
500 கிலோ பிளாஸ்டிக் சிதம்பரத்தில் பறிமுதல்
ADDED : ஜூன் 26, 2024 02:43 AM

சிதம்பரம்,: சிதம்பரத்தில், 500 கிலோ பிளாஸ்டிக் பொருட்களை நகராட்சி அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
கடலூர்கலெக்டர்அருண்தம்புராஜ் உத்தரவின் பேரில், மாவட்டம் முழுவதும் பிளாஸ்டிக் தடுப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன்படி, சிதம்பரம் நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில்தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனையை தடுக்கும் வகையில், நகராட்சி அதிகாரிகள் அதிரடி சோதனை மேற்கொண்டனர்.
அதில், சிதம்பரம் வீரபத்திரசாமி கோவில் தெரு, வி.ஜி.பி., தெரு, தெற்கு வீதி, படித்துறை இறக்கம், பச்சையப்பன் பள்ளி தெரு பகுதியில் உள்ள கடைகளில், அனுமதியின்றி வைக்கப்பட்டிருந்தபிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
நகராட்சி சுகாதார அலுவலர் சாமிநாதன் தலைமை நடந்த சோதனையில், சிதம்பரம் இன்ஸ்பெக்டர் ரமேஷ் பாபு, சப் இன்ஸ்பெக்டர் லட்சுமிராமன் உள்ளிட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
மொத்தம் 500 கிலோ பிளாஸ்டிக் பொருட்களை நகராட்சி அதிகாரிகள் பறிமுதல் செய்து, 4கடை உரிமையாளர்களுக்கு 16 ஆயிரம் அபராதம் விதித்தனர். மேலும் இனி வரும் காலங்களில், கடைக்கு சீல் வைக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டது.