/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ சுகாதாரத்துறை பெண் அலுவலர்கள் போராட்டம் சுகாதாரத்துறை பெண் அலுவலர்கள் போராட்டம்
சுகாதாரத்துறை பெண் அலுவலர்கள் போராட்டம்
சுகாதாரத்துறை பெண் அலுவலர்கள் போராட்டம்
சுகாதாரத்துறை பெண் அலுவலர்கள் போராட்டம்
ADDED : ஜூன் 26, 2024 02:43 AM

கடலுார் : கடலுார் அரசு சுகாதாரத்துறை பெண் அலுவலர்கள், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, கலெக்டர் அலுவலகம் எதிரில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கிராம சுகாதார செவிலியர்களை, துணை சுகாதார நிலையங்களில் உள்ள காலி பணியிடங்களில் நிரப்ப வேண்டும், கிராமங்களில் வீடுகளில் கட்டாய கணக்கெடுப்பு பணியை ரத்து செய்ய வேண்டும் உள்ளிட்ட 5 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி, கடலுார் மாவட்ட தமிழ்நாடு அரசு சுகாதாரத் துறை அனைத்து பெண் அலுவலர் சங்கம் சார்பில், கடலுார் கலெக்டர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது.
மாநில தலைவர் மணிமேகலை தலைமை தாங்கினார். மாவட்ட தலைவர் ஸ்ரீமதி, செயலாளர் கவிதா, பொருளாளர் நவநீதம், நிர்வாகிகள் நிர்மலா, சுமதி, மீனா, அமுதா, புவனேஸ்வரி, ரேவதி, கஸ்துாரி உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர். ஆர்ப்பாட்டத்தை தொடர்ந்து, கலெக்டர் அருண்தம்புராஜிடம் கோரிக்கை மனு அளித்துவிட்டு கலைந்து சென்றனர்.