/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ புவனகிரி அருகே குண்டு வீச்சு தலைமறைவு வாலிபர் கைது புவனகிரி அருகே குண்டு வீச்சு தலைமறைவு வாலிபர் கைது
புவனகிரி அருகே குண்டு வீச்சு தலைமறைவு வாலிபர் கைது
புவனகிரி அருகே குண்டு வீச்சு தலைமறைவு வாலிபர் கைது
புவனகிரி அருகே குண்டு வீச்சு தலைமறைவு வாலிபர் கைது
ADDED : ஜூலை 20, 2024 04:27 AM

புவனகிரி: முன்விரோத தகராறில் பெட்ரோல் குண்டு வீசி 3 பேரை கொலை செய்ய முயன்ற வழக்கில், மேலும் ஒருவரை போலீசார் கைது செய்தனர்.
புவனகிரி அடுத்த பெருமாத்துார் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் திருமலைராஜன், 44; அருண்குமார். இருவருக்கும் முன்விரோதம் உள்ளது. திருமலைராஜன் கடந்த மே 13ம் தேதி இரவு தனது நண்பர்களான சுந்தரபாண்டியன்,45; பூதவராயன்பேட்டை விஜயகுமார் ஆகியோருடன் அதே பகுதியில் உள்ள குளக்கரையில் மது அருந்தினார்.
அப்போது, அருண்குமார் தனது நண்பர்களுடன் சேர்ந்து திருமலைராஜன் உள்ளிட்ட மூவரையும் பெட்ரோல் குண்டு வீசி, வெட்டி கொலை செய்ய முயன்றார்.
இதுகுறித்த புகாரின் பேரில் புவனகிரி போலீசார் வழக்கு பதிந்து 6 பேரை கைது செய்தனர். மேலும், மூவரை தேடிவந்தனர். இந்நிலையில் தலைமறைவாக இருந்த சிதம்பரம் குஞ்சரமூர்த்தி விநாயகர் கோவில் தெரு ராஜசேகர் மகன் விமல்ராஜ்,25; என்பவரை நேற்று கைது செய்து, கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைந்தனர். இவ்வழக்கு தொடர்பாக மேலும், இருவரை தேடிவருகின்றனர்.