Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ பைக் மோதி விவசாயி பலி

பைக் மோதி விவசாயி பலி

பைக் மோதி விவசாயி பலி

பைக் மோதி விவசாயி பலி

ADDED : ஜூலை 20, 2024 04:29 AM


Google News
பெண்ணாடம்: சாலையை கடக்க முயன்ற விவசாயி, பைக் மோதி இறந்தார்.

பெண்ணாடம் அடுத்த பெரியகொசப்பள்ளம் மெயின்ரோட்டை சேர்ந்தவர் ராஜாங்கம்,58; விவசாயி. இவர் நேற்று இரவு 9:30 மணிக்கு பெரியகொசப்பள்ளம் பஸ் நிறுத்தம் அருகே விருத்தாசலம் - திட்டக்குடி சாலையை கடக்க முயன்றார்.

அப்போது அவ்வழியே வந்த பைக் ராஜாங்கம் மீது மோதியது. அதில் ராஜங்கம் சம்பவ இடத்திலேயே இறந்தார். பைக் ஓட்டி வந்த அதேபகுதியை சேர்ந்த கோபிநாத்,25; படுகாயமடைந்தார்.

தகவலறிந்த பெண்ணாடம் போலீசார் ராஜங்கம் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திட்டக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும், இதுகுறித்து வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us