ADDED : ஜூன் 28, 2024 01:14 AM
விருத்தாசலம்: மங்கலம்பேட்டை அடுத்த மாத்துாரை சேர்ந்தவர் வேலாயுதம் மனைவி ஆதிலட்சுமி, 42. அதே பகுதியில் புதிதாக வீடு கட்டி வருகின்றனர். கட்டுமான பணிகளை கவனித்த அவர் இருவரும், அங்கேயே இரவு துாங்கினர். அப்போது, நேற்று அதிகாலையில் ஆதிலட்சுமி அணிந்திருந்த ஒரு சவரன் தாலி செயினை மர்ம நபர் ஒருவர், அறுத்துக் கொண்டு தப்பியோடினார்.
அவரது அலறல் சத்தம் கேட்டு, வேலாயுதம் எழுந்து மர்ம நபரை விரட்டி பிடிக்க முயன்றும், அவர் இருட்டில் மறைந்து தப்பினார். புகாரின் பேரில், மங்கலம்பேட்டை போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வந்தனர். இந்நிலையில், போலீசார் வாகன சோதனையில், சந்தேகத்திற்கிடமான நபரை பிடித்து விசாரித்தனர். அதில், அவர், விருத்தாசலம் அடுத்த செம்பளக்குறிச்சியை சேர்ந்த கொளஞ்சி மகன் மணிகண்டன், 39, என்பதும், ஆதிலட்சுமியின் கழுத்தில் இருந்து செயினை பறித்ததையும் ஒப்புக் கொண்டார்.
மங்கலம்பேட்டை போலீசார் வழக்குப் பதிந்து, மணிகண்டனை கைது செய்தனர்.