/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ கொலை முயற்சி வழக்கில் கைதான 2 பேருக்கு 'குண்டாஸ்' கொலை முயற்சி வழக்கில் கைதான 2 பேருக்கு 'குண்டாஸ்'
கொலை முயற்சி வழக்கில் கைதான 2 பேருக்கு 'குண்டாஸ்'
கொலை முயற்சி வழக்கில் கைதான 2 பேருக்கு 'குண்டாஸ்'
கொலை முயற்சி வழக்கில் கைதான 2 பேருக்கு 'குண்டாஸ்'
ADDED : ஜூன் 28, 2024 01:14 AM

கடலுார்: தகராறை தட்டிக் கேட்டவரை கொல்ல முயன்ற 2 பேர் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப் பட்டனர்.
நெய்வேலி, வட்டம் 21ஐ் சேர்ந்தவர் பாண்டியன் மகன் கிருபாகரன்,25; இவர், கடந்த 6ம் தேதி, வீட்டின் வெளியில் நின்று கொண்டிருந்தார். அப்போது, வட்டம் 11ஐ சேர்ந்த ஜெயகாந்தன் மகன் குணசீலன் உட்பட 5 பேர் பைக்கில் அந்த வழியாக வேகமாக சென்றனர்.
இதனை கிருபாகரன் தட்டி கேட்டதால் தகராறு ஏற்பட்டது. தடுக்க வந்த பாண்டியனை, 5 பேரும் கத்தியால் குத்தி கொலை செய்ய முயன்றனர். இதுகுறித்து நெய்வேலி தெர்மல் போலீசார் வழக்குப் பதிந்து குணசீலன், சக்திவேல் மகன் பிரசாத், 21; உட்பட 5 பேரை கைது செய்தனர்.
குணசீலன், பிரசாத் ஆகியோர் மீது நெய்வேலி தெர்மல் காவல் நிலையத்தில் கொலை முயற்சி, அடிதடி உள்ளிட்ட 5 வழக்குகள் உள்ளது.
இவர்களின் தொடர் குற்றங்களை தடுக்கும் பொருட்டு குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய எஸ்.பி.,ராஜாராம், கலெக்டர் அருண் தம்புராஜிக்கு பரிந்துரை செய்தார்.
கலெக்டரின் உத்தரவின்படி, கடலுார் மத்திய சிறையில் உள்ள குணசீலன், பிரசாத் ஆகியோரிடம் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்வதற்கான உத்தரவு நகலை போலீசார் நேற்று வழங்கினர்.