/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ வக்கீலுக்கு கொலை மிரட்டல் நெய்வேலியில் பரபரப்பு வக்கீலுக்கு கொலை மிரட்டல் நெய்வேலியில் பரபரப்பு
வக்கீலுக்கு கொலை மிரட்டல் நெய்வேலியில் பரபரப்பு
வக்கீலுக்கு கொலை மிரட்டல் நெய்வேலியில் பரபரப்பு
வக்கீலுக்கு கொலை மிரட்டல் நெய்வேலியில் பரபரப்பு
ADDED : ஜூலை 18, 2024 05:25 AM
நெய்வேலி, : நெய்வேலியில் வழக்கறிஞருக்கு மர்ம நபர்கள் கொலை மிரட்டல் விடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நெய்வேலி ஆர்ச்கேட் அருகே தில்லை நகரை சேர்ந்தவர் செந்தில்முருகன், 50; நெய்வேலி மாவட்ட குற்றவியல் மற்றும் உரிமையியல் நீதிமன்றத்தில் 20 ஆண்டுகளுக்கு மேலாக வழக்கறிஞராக பணியாற்றி வருகிறார். தமிழகத்தின் பல்வேறு கோர்ட்டுகளில் வழக்கு தொடர்பாக ஆஜராகி வருகிறார். செந்தில் முருகனுக்கு கடந்த சில வாரங்களுக்கு முன் ஒரு கொலை மிரட்டல் கடிதம் வந்துள்ளது.
இதுகுறித்துஅவர், நெய்வேலி கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். அதையடுத்து, கோர்ட் பிறப்பித்த உத்தரவின் அடிப்படையில். நெய்வேலி டவுன்ஷிப் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.
மேலும் இந்த கடிதத்தை அனுப்பியதாக, வட்டம் 21 ஐ சேர்ந்த வேலுமணி மகன் சிவக்குமார் யார் என்பது குறித்து போலீசார் விசாரணையை துவக்கி உள்ளனர்.