/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ மனைவியை தற்கொலைக்கு துாண்டிய கணவன் கைது மனைவியை தற்கொலைக்கு துாண்டிய கணவன் கைது
மனைவியை தற்கொலைக்கு துாண்டிய கணவன் கைது
மனைவியை தற்கொலைக்கு துாண்டிய கணவன் கைது
மனைவியை தற்கொலைக்கு துாண்டிய கணவன் கைது
ADDED : ஜூலை 18, 2024 05:26 AM

புவனகிரி, : புவனகிரி அருகே மனைவியை தற்கொலைக்கு துாண்டிய கணவனை போலீசார் கைது செய்தனர்.
புவனகிரி அருகே வண்டுராயன்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் செல்வக்குமார்,38; அரசு போக்கவரத்து கழகத்தில் கண்டக்டராக பணிபுரிந்து வந்தார். இவருக்கும் சின்னசேலத்தை சேர்ந்த சுப்ரமணியன் மகள் சூர்யா,32; என்ற பெண்ணுக்கும் கடந்த ஆண்டு செப்., 17 ம் தேதி திருமணம் நடந்தது.
தம்பதியினர் புவனகிரி பெருமாத்துார் பாலு நகரில் வாடகை வீட்டில் வசித்து வந்தனர். இந்நிலையில் சூர்யா கடந்த மாதம் 25ம் தேதி துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
சூர்யா பெற்றோர், தனது மகள் சாவில் சந்தேகம் இருப்பதாக புவனகிரி போலீசில் புகார் கொடுத்தனர். விசாரணையில், வரதட்சணை கேட்டு மனைவியை, செல்வகுமார் கொடுமை படுத்தியது தெரியவந்தது. அதையடுத்து, தற்கொலைக்கு துாண்டியதாக வழக்கு பதிந்து, செல்வகுமாரை போலீசார் கைது செய்தனர்.