Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ மெடிக்கல்ஸ் நல சங்க பொதுக்குழு கூட்டம்

மெடிக்கல்ஸ் நல சங்க பொதுக்குழு கூட்டம்

மெடிக்கல்ஸ் நல சங்க பொதுக்குழு கூட்டம்

மெடிக்கல்ஸ் நல சங்க பொதுக்குழு கூட்டம்

ADDED : ஜூலை 13, 2024 12:42 AM


Google News
Latest Tamil News
சிதம்பரம்: கடலுார் மாவட்ட மெடிக்கல்ஸ் நலச் சங்கம் என்ற பெயரில் புதிய சங்கம் துவங்கப்பட்டு. முதல் பொதுக்குழு கூட்டம் சிதம்பரத்தில் நடந்தது.

கூட்டத்திற்கு, சிதம்பரம் வாணி பார்மசி உரிமையாளர் முருகேசன் வரவேற்றார். சங்க தலைவராக மூத்த உறுப்பினர், காட்டுமன்னார்கோயில் வெங்கடேஸ்வரா பார்மசி உரிமையாளர் சீனிவாச நாராயணன், செயலாளராக சிதம்பரம் ஜே.வி.எஸ். பார்மா வெங்கடசுந்தரம், பொருளாளராக கடலுார் வெங்கடேஸ்வரா ஏஜன்சி உரிமையாளர் சுகுமார், துணைத் தலைவராக இமயவர்மன், மொத்த வணிக பிரிவு தலைவராக பிரகாஷ் ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

இனி வரும் காலங்களில், மாவட்டத்தில் உள்ள மொத்தம் மற்றும் சில்லரை வணிகம் செய்யும் அனைத்து உறுப்பினர்களையும் ஒருங்கிணைத்து செயல்படுவது. சங்க சட்ட, திட்டங்கள் குறித்து பேசுவது. அகில இந்திய சங்கம் மற்றும் தமிழ்நாடு மருந்து வணிக சங்கத்தின் வழிகாட்டுதலோடு சங்கத்தை வழி நடத்துவது.

உறுப்பினர்களின் நலன் மற்றும் பாதுகாப்பில் அதிக கவனம் செலுத்துவது. சங்க பதிவு சான்றிதழ், உறுப்பினர்களுக்கு அடையாள அட்டை வழங்குவது உட்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கூட்டத்தில் ஸ்ரீமுஷ்ணம், காட்டுமன்னார்கோவில், புவனகிரி, சிதம்பரம் மற்றும் கடலுார் தாலுகாவிற்குட்பட்ட 200க்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் பங்கேற்றனர். கூட்ட ஏற்பாடுகளை கண்ணன், சசிகுமார், ரமேஷ் ஆகியோர் செய்திருந்தனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us