ADDED : ஜூன் 26, 2024 03:46 AM
புவனகிரி : மேல்புவனகிரி ஒன்றியம், சாத்தப்பாடி, ஆலம்பாடி, தையாக்குப்பம் உள்ளிட்ட பகுதியில் உள்ள பள்ளிகளில் புதியதாக சேர்ந்த மாணவர்களுக்கு, அரசு பள்ளிகளை ஆதரிப்போம் அமைப்பின் சார்பில் பரிசு வழங்கப்பட்டது.
அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் அருணாசலம், வெள்ளி நாணயம், கல்வி உபகரணங்கள் மற்றும் மரக்கன்றுகள் வழங்கி வாழ்த்தினார். நிகழ்ச்சியில் தலைமை ஆசிரியர் குளோதில்ட்டா மேரி மற்றும் ஆசிரியர்கள், மாணவர்கள் பெற்றோர் பங்கேற்றனர்.
ஆசிரியர் குமார் நன்றி கூறினார்.