ADDED : ஜூன் 26, 2024 03:13 AM
பண்ருட்டி : பண்ருட்டி தாலுகா அலுவலகத்தில், இந்துமக்கள் கட்சி சார்பில் நீதிபதி சந்துரு அறிக்கையை அமல்படுத்தக்கூடாது என வலியுறுத்தி, தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு மனு அளித்தனர்.
இதுகுறித்து தாசில்தார் ஆனந்திடம் மனுவை வழங்கினர். இதில் மாவட்ட அமைப்பு செயலாளர் ஜம்புலிங்கம், திருக்கோவில் சொத்து பாதுகாப்பு அணி மாவட்ட தலைவர் நாகராஜ், சித்தர் பேரவை மாவட்ட செயலாளர் சரவணன், கதிர்வேல், நித்தியானந்தம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.