/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ ஆசிரியர் மாற்றப்பட்டதை கண்டித்து மாணவர்களுடன் பெற்றோர் போராட்டம் ஆசிரியர் மாற்றப்பட்டதை கண்டித்து மாணவர்களுடன் பெற்றோர் போராட்டம்
ஆசிரியர் மாற்றப்பட்டதை கண்டித்து மாணவர்களுடன் பெற்றோர் போராட்டம்
ஆசிரியர் மாற்றப்பட்டதை கண்டித்து மாணவர்களுடன் பெற்றோர் போராட்டம்
ஆசிரியர் மாற்றப்பட்டதை கண்டித்து மாணவர்களுடன் பெற்றோர் போராட்டம்
ADDED : ஜூன் 28, 2024 01:04 AM

விருத்தாசலம்: விருத்தாசலம் அருகே பள்ளி ஆசிரியர் இடமாற்றம் செய்ததை கண்டித்து, மாணவர்களுடன் பெற்றோர் போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
விருத்தாசலம் அருகே எம்.பட்டி கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி உள்ளது. 110 மாணவர்கள் படிக்கின்றனர். தலைமை ஆசிரியர் உட்பட நான்கு ஆசிரியர்கள் பணிபுரிகின்றனர். இங்கு பணிபுரிந்த ஆசிரியர் வின்சென்ட், எம்.புதுார் பள்ளிக்கு இடமாறுதல் செய்யப்பட்டார்.
தகவலறிந்த மாணவர்களின் பெற்றோர், ஆசிரியரை இடமாறுதல் செய்யக் கூடாது என தலைமை ஆசிரியரிடம் வலியுறுத்தி வந்தனர். ஆனால், கல்வித்துறை நிர்வாக நடவடிக்கையில் தலையிட முடியாது என பள்ளி நிர்வாகம் தெரிவித்துவிட்டது.
இதனால் விரக்தியடைந்த மாணவர்களின் பெற்றோர், நேற்று காலை 9:00 மணியளவில், மங்கலம்பேட்டை - விருத்தாசலம் சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களிடம் மங்கலம்பேட்டை போலீசார் பேச்சு வார்த்தை நடத்தினர்.
பின்னர், பள்ளி வளாகத்தில் அமர்ந்து உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களிடம், மாவட்ட கல்வி அலுவலர் (துவக்கப் பள்ளிகள்) சேகர் பேச்சுவார்த்தை நடத்தினார். கல்வித்துறை உயர் அதிகாிகளிடம் பேசுவதாக கூறி, சமாதானம் செய்தார். அதையடுத்து, மாணவர்களை வகுப்புக்கு அனுப்பி வைத்து, பெற்றோர் கலைந்து சென்றனர். இந்த சம்பவம், அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.