மனைப்பட்டா கோரி சப் கலெக்டரிடம் மனு
மனைப்பட்டா கோரி சப் கலெக்டரிடம் மனு
மனைப்பட்டா கோரி சப் கலெக்டரிடம் மனு
ADDED : ஜூன் 28, 2024 01:05 AM

சிதம்பரம்: சிதம்பரத்தில் மனைப்பட்டா உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, சப் கலெக்டரிடம், பல்வேறு நகர் பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் மனு அளித்தனர்.
சிதம்பரம் தாசில்தார் அலுவலகத்தில் நடந்த ஜமாபந்தி நிறைவு நாளில், பொதுமக்கள் பலர், பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக, சப் கலெக்டர் ராஷ்மி ராணியிடம் மனு அளித்தனர். அந்த வகையில், சிதம்பரம் இந்திரா நகர், நேரு நகர், எம்.ஜி.ஆர். நகர உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள், மாற்றுத்திறனாளிகள், மனு அளித்தனர்.
பொதுமக்களுடன் நகர்மன்ற துணைத் தலைவர் முத்துக்குமார். மா.கம்யூ., நகர செயலர் ராஜா, கலியமூர்த்தி, சுந்தரமூர்த்தி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
ஊனமுற்றோர்கள் இருந்ததால், சப் கலெக்டர் ராஷ்மிராணி அலுவலகத்தை விட்டு வெளியில் வந்து மனுவை பெற்றார். அப்போது தாசில்தார் ேஹமாஆனந்தி, வருவாய் ஆய்வாளர் நாகேந்திரன் உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர்.