/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ நெடுஞ்சாலையில் மரக்கன்றுகள் நடும் பணி நெடுஞ்சாலையில் மரக்கன்றுகள் நடும் பணி
நெடுஞ்சாலையில் மரக்கன்றுகள் நடும் பணி
நெடுஞ்சாலையில் மரக்கன்றுகள் நடும் பணி
நெடுஞ்சாலையில் மரக்கன்றுகள் நடும் பணி
ADDED : ஜூன் 28, 2024 01:06 AM
சிதம்பரம்: சிதம்பரம் - திருச்சி தேசிய நெடுஞ்சாலையோரம் மரக்கன்றுகள் நடும்பணி நடந்தது.
சிதம்பரத்தில் இருந்து திருச்சி வரை தேசிய நெடுஞ்சாலை அமைக்கும் பணிகள் கடந்த 2021 ம் ஆண்டு துவங்கியது. அதில், சிதம்பரம் -மீன்சுருட்டி இடையிலான 31 கிலோ மீட்டர் துார பணி கடந்த 3 மாதங்களுக்கு முன்பு பணிகள் முற்றிலும் முடிக்கப்பட்டு போக்குவரத்து துவங்கியுள்ளது.
இந்நிலையில், சிதம்பரத்தில் இருந்து மீன்சுருட்டி வரையிலான சாலையோரம் 18 ஆயிரம் மரக்கன்றுகள் நட முடிவு செய்யப்பட்டு, 14 ஆயிரம் மரக்கன்றுகள் நடப்பட்டது. எஞ்சியுள்ள மரக்கன்றுகள் நடும் பணி தற்போது நடந்து வருகிறது. பாதாம், வேம்பு, மலை வேம்பு, மகிழம் உள்ளிட்ட பல்வேறு மரக்கன்றுகள் நடப்படுகிறது.