ADDED : ஜூன் 28, 2024 01:05 AM

சிதம்பரம்: சிதம்பரம் குருவயர் தெருவில் அமைந்துள்ள அவதூத சுவாமிகள் 59வது ஆண்டு குருபூஜை விழா நடந்தது.
சிதம்பரத்தில் தவம் புரிந்து, சமாதி அடைந்து, மக்களுக்கு அருள்புரிந்து வருபவர் அவதூத சுவாமிகள். அவரது சமாதியுடன் கூடிய மடம் குருவயர் தெருவில் உள்ளது. அங்கு, அவதுாத சாமிகளின் குருபூஜை விழா நேற்று நடந்தது.
அதையொட்டி, சாமிக்கு சிறப்பு யாகம் வளர்த்து, சிறப்பு அபிஷேகம், அலங்கார ஆராதனை நடந்தது. திரளாக பக்தர்கள் தரிசனம் செய்தனர்.