/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ போக்குவரத்து போலீசார் விழிப்புணர்வு பிரசுரம் போக்குவரத்து போலீசார் விழிப்புணர்வு பிரசுரம்
போக்குவரத்து போலீசார் விழிப்புணர்வு பிரசுரம்
போக்குவரத்து போலீசார் விழிப்புணர்வு பிரசுரம்
போக்குவரத்து போலீசார் விழிப்புணர்வு பிரசுரம்
ADDED : ஜூலை 19, 2024 05:25 PM

கடலுார்: கடலுார் போக்குவரத்து காவல்துறை சார்பில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு துண்டு பிரசுரம் வழங்கப்பட்டது.
கடலுார் அண்ணா மேம்பாலம் சிக்னலில், போக்குவரத்து காவல்துறை சார்பில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு துண்டு பிரசுரம் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. போக்குவரத்து இன்ஸ்பெக்டர் முத்துக்குமரன் தலைமை தாங்கினார். இதில், ெஹல்மெட் அணிவது, மொபைல் போன் பேசியபடி வாகனம் ஓட்டக்கூடாது, மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டக்கூடாது உள்ளிட்ட விழிப்புணர்வுகள் அடங்கிய துண்டு பிரசுரங்களை வழங்கினர்.
அப்போது, சப் இன்ஸ்பெக்டர் மகாலிங்கம், ராமச்சந்திரன் மற்றும் போலீசார் உடனிருந்தனர்.