/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ 'விவசாயத்தில் 'ட்ரோன்' செயல்பாடு மாணவர்களுக்கு பயிற்சி 'விவசாயத்தில் 'ட்ரோன்' செயல்பாடு மாணவர்களுக்கு பயிற்சி
'விவசாயத்தில் 'ட்ரோன்' செயல்பாடு மாணவர்களுக்கு பயிற்சி
'விவசாயத்தில் 'ட்ரோன்' செயல்பாடு மாணவர்களுக்கு பயிற்சி
'விவசாயத்தில் 'ட்ரோன்' செயல்பாடு மாணவர்களுக்கு பயிற்சி
ADDED : ஜூன் 16, 2024 06:26 AM

விருத்தாசலம்: மங்கலம்பேட்டை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவர்களுக்கு, ட்ரோன் செயல்பாடு குறித்து களப்பயிற்சி நடந்தது.
நிகழ்ச்சிக்கு, தலைமை ஆசிரியர் கண்ணன் தலைமை தாங்கினார். உதவி தலைமை ஆசிரியர் ராமலிங்கம், ஆசிரியர்கள் ராமமூர்த்தி, வேல்முருகன் முன்னிலை வகித்தனர். அதில், ட்ரோன் செயல்பாடு, அதன் வகைகள், விவசாய பணிகளுக்கு பயன்படுத்துவது குறித்து நேரடி செயல்விளக்க பயிற்சி தரப்பட்டது.
வேளாண் அறிவியல் பிரிவு ஆசிரியர் பாபாஜி, ட்ரோன் இயக்குனர் கிருஷ்ணகுமார், இணை இயக்குனர் சரவணன் ஆகியோர் பயிற்சி அளித்தனர். இதற்காக, பில்லுார் கிராமத்தில் உள்ள விளைநிலத்தில் மாணவர்களுக்கு பயிற்சி தரப்பட்டது.