/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ மழை அளவீடு கருவி நெல்லிக்குப்பத்தில் அமைப்பு மழை அளவீடு கருவி நெல்லிக்குப்பத்தில் அமைப்பு
மழை அளவீடு கருவி நெல்லிக்குப்பத்தில் அமைப்பு
மழை அளவீடு கருவி நெல்லிக்குப்பத்தில் அமைப்பு
மழை அளவீடு கருவி நெல்லிக்குப்பத்தில் அமைப்பு
ADDED : ஜூன் 16, 2024 06:26 AM

நெல்லிக்குப்பம்: நெல்லிக்குப்பம் வருவாய் ஆய்வாளர் அலுவலகத்தில் தானியங்கி மழை அளவீடு கருவி அமைக்கப்பட்டது.
நெல்லிக்குப்பம் சுற்றுவட்டார பகுதிகளில் பெய்யும் மழையின் அளவை கணக்கிட மழைமானி வசதியில்லை. தனியார் சர்க்கரை ஆலையில் எடுக்கும் கணக்கை கேட்டு தெரிந்து கொள்ள வேண்டிய நிலை இருந்தது.
இந்நிலையில், ஒவ்வொரு வருவாய் ஆய்வாளர் அலுவலகம் மற்றும் ஒன்றிய அலுவலகங்களில் தானியங்கி மழைமானி வைக்க தமிழக அரசு உத்தரவிட்டது.
அதன்படி நெல்லிக்குப்பம் வஜீர்கான் தெருவில் உள்ள வருவாய் ஆய்வாளர் அலுவலகத்தில் மழைமானி பொருத்தப்பட்டது. இக்கருவி சூரிய ஒளி மின்சாரத்தில் இயங்கும்படி வடிவமைத்துள்ளனர்.
மேலும் மழையின் அளவை சென்சார் கருவி மூலம் அளந்து நேரடியாக சென்னை அலுவலகத்துக்கு அனுப்பும் வசதியை செய்துள்ளனர். இதன்மூலம் மழை பெய்த 30 நிமிடத்தில் மழையின் அளவை சென்னை அலுவலகத்தில் தெரிவித்து அதற்கேற்ப நடவடிக்கை எடுக்க முடியும் என வருவாய் ஆய்வாளர் அன்வர்தீன் தெரிவித்தார்.