/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ சிதம்பரத்தில் அ.தி.மு.க., தோல்வி ஏன்? பழனிசாமி 'அட்வைஸ்' சிதம்பரத்தில் அ.தி.மு.க., தோல்வி ஏன்? பழனிசாமி 'அட்வைஸ்'
சிதம்பரத்தில் அ.தி.மு.க., தோல்வி ஏன்? பழனிசாமி 'அட்வைஸ்'
சிதம்பரத்தில் அ.தி.மு.க., தோல்வி ஏன்? பழனிசாமி 'அட்வைஸ்'
சிதம்பரத்தில் அ.தி.மு.க., தோல்வி ஏன்? பழனிசாமி 'அட்வைஸ்'
ADDED : ஜூலை 17, 2024 12:46 AM
லோக்சபா தேர்தல் முடிவு குறித்து தொகுதி வாரியாக, சென்னை தலைமை அலுவலகத்தில், நிர்வாகிகளுடன் பொதுச்செயலாளர் பழனிசாமி ஆலோசனை நடத்தி வருகிறார்.
சிதம்பரம் தொகுதிக்கு நடந்த ஆலோசனை கூட்டத்தில், மாவட்ட செயலாளர்கள் அருண்மொழிதேவன், பாண்டியன், முன்னாள் அமைச்சர் செல்வி ராமஜெயம், சிதம்பரம் தொகுதியில் போட்டியிட்ட சந்திரகாசன் மற்றும் நூற்றுக்கும் மேற்பட்ட பொறுப்பாளர்கள் பங்கேற்றனர்.
கூட்டத்தில் பேசிய பழனிசாமி, 'தேர்தல் தோல்வி சம்பந்தமாக யாரையும் குறைக் கூறி பேச வேண்டாம் . தேர்தலில் என்ன நடந்தது என்பது எங்களுக்கு தெரியும்.
எனவே, வரும் 2026 சட்டசபை தேர்தலில் எப்படி வெற்றி பெறுவது என்பது குறித்து கருத்து தெரிவித்தால் போதும்' என்றார்.
தொடர்ந்து பேசிய நிர்வாகிகள், கூட்டணி பலம் நம்மிடம் இல்லாததால், தேர்தலில் தோல்வி அடைந்தோம். வட மாவட்டங்களை பொறுத்த வரை பா.ம,க., மற்றும் வி.சி., கட்சிகளின் கூட்டணி இல்லாமல் வெற்றி பெற முடியாது.
அதனால் வரும் 2026 சட்டசபை தேர்தலில் பலமான கூட்டணி அமைத்தால் தான் வெற்றி பெற முடியும் என கூறினார்.
இதனால், கடுப்பான பழனிசாமி, கூட்டணி அமைப்பது சம்பந்தமாக நான் பார்த்துக் கொள்கிறேன். நீங்கள் அனைவரும், முதலில் கருத்து வேறுபாடு இன்றி ஒற்றுமையுடன் தேர்தல் பணியாற்ற வேண்டும். அடிக்கடி மாவட்ட, ஒன்றிய நிர்வாகிகள் ஆலோசனை கூட்டங்கள் நடத்தி, கட்சியின் வெற்றிக்கு உழைக்க வேண்டும் என்றார்.
சிதம்பரம் தொகுதி தேர்தல் தோல்வி குறித்து, கட்சி தலைமையில் தங்களின் ஆதங்கத்தை கொட்டுவதற்காக சென்ற சில நிர்வாகிகள், பழனிசாமியின் அதிரடியால் செய்வதறியாது திரும்பினர்.