/உள்ளூர் செய்திகள்/கடலூர்/பழனிசாமிக்கு சிறப்பான வரவேற்பு தெற்கு மாவட்ட அ.தி.மு.க., முடிவுபழனிசாமிக்கு சிறப்பான வரவேற்பு தெற்கு மாவட்ட அ.தி.மு.க., முடிவு
பழனிசாமிக்கு சிறப்பான வரவேற்பு தெற்கு மாவட்ட அ.தி.மு.க., முடிவு
பழனிசாமிக்கு சிறப்பான வரவேற்பு தெற்கு மாவட்ட அ.தி.மு.க., முடிவு
பழனிசாமிக்கு சிறப்பான வரவேற்பு தெற்கு மாவட்ட அ.தி.மு.க., முடிவு
ADDED : பிப் 11, 2024 03:14 AM

வடலுார்: நெய்வேலிக்கு, வருகை தரும் முன்னாள் முதல்வர் பழனிச்சாமிக்கு சிறப்பான வரவேற்பு அளிப்பதென, கடலுார் தெற்கு மாவட்ட அ.தி.மு.க., முடிவு செய்துள்ளது.
நெய்வேலி டவுன்ஷிப் செவ்வாய் சந்தை அருகே முன்னாள் முதல்வர் ஜெயலலிதா முழு உருவ வெண்கல சிலை அமைக்கப்பட்டுள்ளது.
இந்த சிலையை, வரும் 22ம் தேதி முன்னாள் முதல்வர் பழனிச்சாமி திறந்து வைக்கிறார். அதையொட்டி, ஏற்பாடுகள் குறித்து, கடலூர் தெற்கு மாவட்ட அ.தி.மு.க. நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நெய்வேலி அண்ணா தொழிலாளர்கள், ஊழியர்கள் சங்க அலுவலகத்தில் நடந்தது.
மாவட்ட செயலாளர் சொரததுார் ராஜேந்திரன் தலைமை தாங்கினார். ஒன்றிய செயலாளர்கள் கோவிந்தராஜ், பாஷியம், கமலக்கண்ணன், வினோத் முன்னிலை வகித்தனர். நெய்வேலி நகர செயலாளர் கோவிந்தராஜ் வரவேற்றார்.
கூட்டத்தில், நெய்வேலிக்கு வருகை தரும் அ.தி.மு.க பொதுச் செயலாளர் பழனிசாமிக்கு, கடலூர் தெற்கு மாவட்ட அ.தி.மு.க., சார்பில் பண்ருட்டி அருகே சிறப்பான வரவேற்பு அளிப்பதென தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
முன்னாள் எம்.எல்.ஏ., சிவசுப்ரமணியன், மாநில தொழிற்சங்க பிரிவு சூரியமூர்த்தி, மாவட்ட பேரவை செயலாளர் வழக்கறிஞர் ராஜசேகர், மாவட்ட அமைத்தலைவர் முத்துலிங்கம், எம்.ஜி.ஆர்.மன்ற செயலாளர் தங்கப்பன், நெய்வேலி அண்ணா தொழிற்சங்க நிர்வாகிகள் வெற்றிவேல், தேவானந்தம், ஜோதி உட்பட பலர் கலந்து கொண்டனர்.