/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ போக்சோ வழக்கில் தலைமறைவு வாலிபர் கைது போக்சோ வழக்கில் தலைமறைவு வாலிபர் கைது
போக்சோ வழக்கில் தலைமறைவு வாலிபர் கைது
போக்சோ வழக்கில் தலைமறைவு வாலிபர் கைது
போக்சோ வழக்கில் தலைமறைவு வாலிபர் கைது
ADDED : செப் 25, 2025 04:30 AM

காட்டுமன்னார்கோவில் : சிறையில் இருந்து ஜாமினில் வெளிவந்து தலைமறைவான போக்சோ வழக்கு குற்றவாளியை காட்டுமன்னார்கோவில் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
காட்டுமன்னார்கோவில் அடுத்த மேல கஞ்சங்கொல்லையை சேர்ந்த சந்துரு மகன் மணிகண்டன, 23; இவர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்டு கடலுார் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
பின்னர் ஜாமினில் வெளியில் வந்த மணிகண்டன் தலை மறைவானார்.
கோர்ட் விசாரணைக்கு ஆஜராகாமல் இருந்ததால் மணிகண்டனை கைது செய்து கோர்ட்டில் ஆஜர் படுத்த காட்டுமன்னார்கோவில் கோர்ட் உத்தரவிட்டது.
அதன் பேரில் சப் இன்ஸ்பெக்டர் சையத் அப்சல் மற்றும் போலீசார் போக்சோ குற்றவாளி மணிகண்டனை தேடி வந்தனர்.
நேற்று முன்தினம் இரவு உறவினர் வீட்டில் பதுங்கி இருந்த மணிகண்டனை போலீசார் கைது செய்து காட்டுமன்னார்கோவில் கோர்ட்டில் ஆஜர்படுத்தி மீண்டும் சிறையில் அடைத்தனர்.