/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ அ.தி.மு.க., பொதுக் கூட்டம் மாவட்ட செயலாளர் அழைப்பு அ.தி.மு.க., பொதுக் கூட்டம் மாவட்ட செயலாளர் அழைப்பு
அ.தி.மு.க., பொதுக் கூட்டம் மாவட்ட செயலாளர் அழைப்பு
அ.தி.மு.க., பொதுக் கூட்டம் மாவட்ட செயலாளர் அழைப்பு
அ.தி.மு.க., பொதுக் கூட்டம் மாவட்ட செயலாளர் அழைப்பு
ADDED : செப் 14, 2025 01:51 AM

சிதம்பரம் : சிதம்பரத்தில் நடக்கும் முன்னாள் முதல்வர் அண்ணாதுரை பிறந்த நாள் விழா பொதுக் கூட்டத்தில் நிர்வாகிகள் திரளாக பங்கேற்க வேண்டு மென, அ.தி.மு.க., மாவட்ட செயலாளர் பாண்டியன் எம்.எல்.ஏ., கூறியுள்ளார்.
அவரது அறிக்கை:
கடலுார் கிழக்கு மாவட்ட அ.தி.மு.க., சார்பில் முன்னாள் முதல்வர் அண்ணாதுரை பிறந்த நாள் விழா பொதுக் கூட்டம் சிதம்பரம் போல் நாராயண் தெருவில் வரும் 16ம் தேதி நடக்கிறது. முன்னாள் அமைச்சர்கள் மோகன், ஜெயபால், தலைமை கழக பேச்சாளர்கள் கோவிந்தராஜ், சந்தானம் பேசு கின்றனர்.
நாளை 15ம் தேதி, காலை 10:00 மணிக்கு சிதம்பரம் வண்டிகேட்டில் அண்ணாதுரை, எம்.ஜி.ஆர்., ஜெ., ஆகியோர் சிலைகளுக்கு மாலை அணிவிக்கும் நிகழ்ச்சி நடக்கிறது. இந்நிகழ்ச்சிகளில் நிர்வாகிகள் திரளாக பங்கேற்க வேண்டும்.