/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ பள்ளியில் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு பள்ளியில் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு
பள்ளியில் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு
பள்ளியில் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு
பள்ளியில் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு
ADDED : மே 26, 2025 03:14 AM

நெல்லிக்குப்பம் : நெல்லிக்குப்பம் டேனிஷ் மிஷன் பள்ளியில் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடந்தது.
நெல்லிக்குப்பம் டேனிஷ் மிஷன் மேல்நிலைப்பள்ளியில் கடந்த 1989ம் ஆண்டு 10ம் வகுப்பு ஆங்கில வழியில் படித்த மாணவ, மாணவிகள் 35 ஆண்டுகளுக்கு பிறகு சந்திப்பு நிகழ்ச்சி நடத்தினர். இதில், 40க்கும் மேற்பட்டோர் குடும்பத்தினருடன் கலந்து கொண்டனர்.
பின், தாங்கள் படித்த வகுப்பறையில் அமர்ந்து பழைய நினைவுகளை பகிர்ந்து கொண்டனர். தங்களுக்கு பாடம் நடத்திய இறந்த ஆசிரியர்களுக்கு மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தினர்.
பாடம் நடத்திய தமிழ் ஆசிரியர் சம்பந்தம், கணித ஆசிரியை ஜெயபிரகாஷ் கிரேசி ஆகியோருக்கு சால்வை அணிவித்து ஆசி பெற்றனர்.