/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ விடுமுறை நாள் எதிரொலி பிச்சாவரத்தில் கூட்டம் விடுமுறை நாள் எதிரொலி பிச்சாவரத்தில் கூட்டம்
விடுமுறை நாள் எதிரொலி பிச்சாவரத்தில் கூட்டம்
விடுமுறை நாள் எதிரொலி பிச்சாவரத்தில் கூட்டம்
விடுமுறை நாள் எதிரொலி பிச்சாவரத்தில் கூட்டம்
ADDED : மே 26, 2025 03:15 AM

கிள்ளை, : பிச்சாவரம் வனச்சுற்றுலா மையத்தில், விடு முறை நாளான நேற்று சுற்றுலா பயணிகளின் கூட்டம் அதிகமாக காணப்பட்டது.
சிதம்பரம் அடுத்த பிச்சாவரம் வன சுற்றுலா மையத்திற்கு, உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணி கள் வந்து, படகு சவாரி செல்கின்றனர்.
நேற்று விடுமுறை நாள் என்பதால் உள்ளூர் மட்டுமின்றி தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் பிச்சா வரத்திற்கு வருகை தந்தனர்.
காலை முதலே சுற்றுலா மைய வளாக முழுதும் பயணிகளின் கூட்டம் அதிக மாக காணப்பட்டது. இதனால், படகு மூலமாக வனக்காடுகளை சுற்றி பார்க்க தாமதம் ஏற்பட்டது.
பெரும்பாலான பயணிகள் சுற்றுலா மையத்தில் பல மணி நேரம் காத்திருந்து இயற்கை அழகை ரசித்து பொழுதை கழித்தனர்.