/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ அங்கன்வாடி ஊழியர்கள் கடலுாரில் ஆர்ப்பாட்டம் அங்கன்வாடி ஊழியர்கள் கடலுாரில் ஆர்ப்பாட்டம்
அங்கன்வாடி ஊழியர்கள் கடலுாரில் ஆர்ப்பாட்டம்
அங்கன்வாடி ஊழியர்கள் கடலுாரில் ஆர்ப்பாட்டம்
அங்கன்வாடி ஊழியர்கள் கடலுாரில் ஆர்ப்பாட்டம்
ADDED : செப் 24, 2025 08:43 AM

கடலுார் : தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சங்கம் சார்பில், கோரிக்கைகளை வலியுறுத்தி கடலுார் கலெக்டர் அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம் நடந்தது.
சங்கத் தலைவர் அன்பரசி தலைமை தாங்கினார். செயலாளர் கலைச்செல்வி, பொருளாளர் வசந்தா, துணை செயலாளர் காயத்ரி முன்னிலை வகித்தனர்.
சி.ஐ.டி.யூ.,மாவட்ட தலைவர் கருப்பையன், கோரிக்கைகளை வலியுறுத்திப் பேசினார்.
அங்கன்வாடி ஊழியர்களை நிரந்தரமாக்க வேண்டும். ஓய்வு பெற்ற ஊழியர்களுக்கு முறையான ஓய்வூதியம் வழங்க வேண்டும்.
பணிக்கொடையாக அங்கன்வாடி ஊழியருக்கு 10 லட்ச ரூபாயும், உதவியாளருக்கு 5 லட்ச ரூபாயும் வழங்க வேண்டும் உட்பட பல்வேறு கோரிக்கைகள் ஆர்ப்பாட் டத்தில் வலியுறுத்தப்பட்டன.