/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ ரூ. 10 லட்சம் நிவாரணம் முதல்வர் வழங்கல் ரூ. 10 லட்சம் நிவாரணம் முதல்வர் வழங்கல்
ரூ. 10 லட்சம் நிவாரணம் முதல்வர் வழங்கல்
ரூ. 10 லட்சம் நிவாரணம் முதல்வர் வழங்கல்
ரூ. 10 லட்சம் நிவாரணம் முதல்வர் வழங்கல்
ADDED : செப் 24, 2025 06:16 AM

நெய்வேலி : சாலை விபத்தில் இறந்த தி.மு.க., உறுப்பினர் குடும்பத்திற்கு முதல்வர் ஸ்டாலின் ரூ. 10 லட்சம் நிவாரணம் வழங்கினார்.
நெய்வேலி அடுத்த கீழூர் ஊராட்சிக்குட்பட்ட பெரியகோவில் குப்பத்தை சேர்ந்தவர் குப்புசாமி,40; தி.மு.க., உறுப்பினர். இவர், கடந்த ஜூன் 5ம் தேதி சாலை விபத்தில் இறந்தார். இவரது குடும்பத்தினருக்கு அமைச்சர் கணேசன், சபா ராஜேந்திரன் எம்.எல்.ஏ., ஆகியோர் வேண்டுகோளை ஏற்று, முதல்வர் ஸ்டாலின், குப்புசாமி குடும்பத்தினருக்கு நேற்று சென்னையில் 10 லட்சம் ரூபாய்க்கான காசோலை வழங்கினார்.
அமைச்சர்கள் துரைமுருகன், கணேசன், எம்.பி., பாலு, தி.மு.க., அமைப்பு செயலாளர் பாரதி, சபா ராஜேந்திரன் எம்.எல்.ஏ., மற்றும் ஒன்றிய செயலாளர் குணசேகரன் உடனிருந்தனர்.