Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ நெஞ்சு வலியால் இன்ஜினியர் சாவு

நெஞ்சு வலியால் இன்ஜினியர் சாவு

நெஞ்சு வலியால் இன்ஜினியர் சாவு

நெஞ்சு வலியால் இன்ஜினியர் சாவு

ADDED : செப் 24, 2025 06:16 AM


Google News
Latest Tamil News
சிதம்பரம் : சிதம்பரத்தில் தனியாக வசித்து வந்த இன்ஜினியர் மாரடைப்பு ஏற்பட்டு இறந்தார்.

சிதம்பரம், அண்ணாமலை நகரில் உள்ள முத்தையா நகரைச் சேர்ந்தவர் பலராமன்,65; இன்ஜியனியர். இவர், மனைவி மற்றும் குடும்பத்தினரை பிரிந்து தனியாக வசித்தார். வீடு கட்டி விற்பனை செய்யும் தொழில் செய்தார்.

கடந்த 19ம் தேதி காலை பலராமனுக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. தகவலறிந்த அக்கம் பக்கத்தினர் மீட்டு மாவட்ட அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அன்றைய தினமே இறந்தார்.

உடலை பெற்றுக் கொள்ள யாரும் வரவில்லை. தகவலறிந்த அண்ணாமலை நகர் இன்ஸ்பெக்டர் அம்பேத்கர் வழக்குப் பதிந்து உடலை பிரேத பரிசோதனைக்காக அனுப்பினார். போலீசார் நேற்று முன்தினம் பொதுமக்கள் முன்னிலையில், பலராமன் வீட்டை திறந்து சோதனை நடத்தினர். இதில், 74 சவரன் நகைகள், 1.50 லட்சம் ரூபாய் இரு ந்ததை பறிமுதல் செய்தனர். கடந்த சில நாட்களுக்கு முன் பலராமனுக்கு சொந்தமான அடுக்குமாடி குடியிருப்பபை விற்பனை செய்ததில், ஒன்றரை கோடி ரூபாய் அவரது வங்கி கணக்கில் இருப் பதும் தெரிந்தது. பலராமனின் குடும்பத்தினர் பற்றிய விவரங்க ளை கண்டறியும் பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.

பல கோடி இருந்தும் ரூ. 2 ஆயிரம் பாக்கி பலராமனுக்கு தேவைப்படும் போதெல்லாம் பெண் ஒருவர் சாப்பாடு கொடுத்தார். பலராமன் இறந்த தகவல் கிடைத்ததும் அதிர்ச்சியடைந்த அந்த பெண், பலராமன் வீட்டிற்கு வந்துள்ளார். அருகில் இருந்தவர்களிடம், தனக்கு சாப்பாடு பணம் 2,000 ரூபாய் தரவில்லையே என, ஆதங்கத்தை வெளிப்படுத்தினார். கோடி கணக்கில் பணம் வைத்திருந்தவர் இந்த பெண்ணிற்கு 2,000 ரூபாயை கொடுத்திருக்கலாமே என, அருகில் இருந்தவர்கள் ஆதங்கத்தை வெளிப்படுத்தினர்.







      Our Apps Available On




      Dinamalar

      Follow us