/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ தாழ்வான பகுதிகளில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில்குமார் அறிவுரை தாழ்வான பகுதிகளில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில்குமார் அறிவுரை
தாழ்வான பகுதிகளில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில்குமார் அறிவுரை
தாழ்வான பகுதிகளில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில்குமார் அறிவுரை
தாழ்வான பகுதிகளில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில்குமார் அறிவுரை
ADDED : மே 24, 2025 11:45 PM

கடலுார்: கடலுார் கலெக்டர் அலுவலகத்தில் தென்மேற்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை தொடர்பான அனைத்துத் துறை அலுவலர்களுடன் ஆய்வுக் கூட்டம் நடந்தது.
கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில்குமார் தலைமை தாங்கினார். கூட்டத்தில் எஸ்.பி., ஜெயக்குமார், கலெக்டரின் நேர்முக உதவியாளர் ரவி உட்பட அனைத்துத் துறை அலுவலர்கள் பங்கேற்றனர்.
கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில்குமார் பேசியதாவது:
தென்மேற்கு பருவமழை துவங்க உள்ளதால் கிராம நிர்வாக அலுவலர்கள், தங்கள் வசிக்கின்ற பகுதிகளில் மழைநீர் தேங்கும் தாழ்வானப் பகுதிகளை கண்டறிந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பொதுமக்களுக்கு அறிவிப்பு வழங்க வேண்டும்.
மழைநீர் தேக்கம் குறித்து விவரம் அறிய முதல் தகவல் அளிப்பவர்களின் விவரங்களை சேகரித்து வைக்க வேண்டும். தாழ்வான பகுதிகள் மற்றும் வெள்ளத்தினால் பாதிப்பு ஏற்படக்கூடிய இடங்களில் உள்ள பொதுமக்களுக்கு மீட்புப் பணிகள் தொடர்பாகவும், பேரிடர் காலங்களில் பாதிக்கப்பட்ட மக்களை பாதுகாப்பான தங்கும் இடங்களுக்கு கொண்டு சென்று தேவையான உணவு, குடிநீர், உடை, மருத்துவ வசதிகளை செய்ய வேண்டும்.
நகராட்சி, பேரூராட்சிகள் மற்றும் ஊராட்சிகளில் உள்ள ஏரி, குளம், குட்டை, வாய்க்கால் உள்ளிட்ட நீர் நிலைகளை ஆய்வு செய்து கரைகளை பலப்படுத்த வேண்டும். மரம் அறுக்கும் இயந்திரம், ஜே.சி.பி., டார்ச்லைட், ஜெனரேட்டர், நீர் வெளியேற்றும் பம்புகள், சின்டக்ஸ் டேங்க் மற்றும் தண்ணீர் லாரி, பிளிச்சிங் பவுடர் தயார் நிலையில் இருக்க வேண்டும்.
அவ்வப்போது ஏற்படும் பாதிப்புகளை உடனுக்குடன் கலெக்டருக்கும், வெள்ள நிவாரண பிரிவு 1077 என்ற தொலைபேசி எண்ணிற்கும் தகவல் தெரிவக்க வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.