/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ விருத்தகிரீஸ்வரர் கோவிலில் சனி பிரதோஷ வழிபாடு விருத்தகிரீஸ்வரர் கோவிலில் சனி பிரதோஷ வழிபாடு
விருத்தகிரீஸ்வரர் கோவிலில் சனி பிரதோஷ வழிபாடு
விருத்தகிரீஸ்வரர் கோவிலில் சனி பிரதோஷ வழிபாடு
விருத்தகிரீஸ்வரர் கோவிலில் சனி பிரதோஷ வழிபாடு
ADDED : மே 24, 2025 11:45 PM
விருத்தாசலம்: விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரர் கோவிலில் சனி பிரதோஷ வழிபாடு நடந்தது.
விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரர் கோவில், நுாற்றுகால் மண்டபத்தில் உள்ள நந்தி பகவானுக்கு நேற்று சனி பிரதோஷத்தையொட்டி நேற்று காலை 11:00 மணிக்கு பால், தயிர், சந்தனம், இளநீர், எலுமிச்சை, தேன் உள்ளிட்ட பொருட்களால் அபிேஷகம் நடந்தது.
பகல் 12:00 மணிக்கு அருகம்புல் மாலை சாற்றி, தீபாராதனை நடந்தது.
அதனைத் தொடர்ந்து மாலை 4:00 மணிக்கு சந்தன காப்பு அலங்காரத்தில் நந்தி பகவான் அருள்பாலித்தார். இதில், ஏராளமானோர் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
இதேப் போன்று, மங்கலம்பேட்டை மாத்ருபுரீஸ்வரர், சின்னவடவாடி அருணாச்சலேஸ்வரர் கோவிலில் நந்தி பகவானுக்கு சனி பிரதோஷ வழிபாடு நடந்தது.