/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ கிள்ளையில் நகர தி.மு.க., நிர்வாகிகள் ஆலோசனை கிள்ளையில் நகர தி.மு.க., நிர்வாகிகள் ஆலோசனை
கிள்ளையில் நகர தி.மு.க., நிர்வாகிகள் ஆலோசனை
கிள்ளையில் நகர தி.மு.க., நிர்வாகிகள் ஆலோசனை
கிள்ளையில் நகர தி.மு.க., நிர்வாகிகள் ஆலோசனை
ADDED : செப் 14, 2025 08:12 AM

கிள்ளை : கிள்ளையில், நகர தி.மு.க., நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடந்தது.
நகர செயலாளர் கிள்ளை ரவிந்திரன் தலைமை தாங் கினார். பேரூராட்சி சேர்மன் மல்லிகா, மாவட்ட மாணவரணி அமைப்பாளர் அப்பு சத்தியநாராயணன், பொறுப்பாளர் பிரபு முன்னிலை வகித்தனர்.
சிதம்பரம் தொகுதி பொறுப்பாளர் பாரிபாலன் பேசினார். கூட்டத்தி ல், வரும் 15ம் தேதி முன்னாள் முதல்வர் அண்ணாதுரை பிறந்த நாள் விழாவை சிறப்பாக கொண்டாடுவது.
கரூரில் 17ம் தேதி நடக்கும் முப்பெரும் விழாவில் திரளாக பங்கேற்பது உள்ளிட்ட தீர்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.
கூட்டத்தில், அவைத் தலைவர் குட்டியாண்டிசாமி, துணை செயலாளர் சத்துருக்கான், ஒன்றிய பிரதிநிதி மகாலிங்கம், மாவட்ட பிரதிநிதி சாமிமலை, கவுன்சிலர்கள் மதுரைச்செல்வி, யாஸ்மின், நிறைமதி, குமார், பாண்டியன் உட்பட பலர் பங்கேற்றனர். பூத் கமிட்டி பொறுப்பாளர் மலையரசன் நன்றி கூறினார்.