/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ 'நலம் காக்கும் ஸ்டாலின்' முகாம் விருதையில் அமைச்சர் பங்கேற்பு 'நலம் காக்கும் ஸ்டாலின்' முகாம் விருதையில் அமைச்சர் பங்கேற்பு
'நலம் காக்கும் ஸ்டாலின்' முகாம் விருதையில் அமைச்சர் பங்கேற்பு
'நலம் காக்கும் ஸ்டாலின்' முகாம் விருதையில் அமைச்சர் பங்கேற்பு
'நலம் காக்கும் ஸ்டாலின்' முகாம் விருதையில் அமைச்சர் பங்கேற்பு
ADDED : செப் 14, 2025 08:05 AM

விருத்தாசலம் : விருத்தாசலம் அரசு ஆண்கள் மேல்நிலை பள்ளி வளாகத்தில், 'நலம் காக்கும் ஸ்டாலின்' திட்ட முகாம் நடந்தது.
கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில்குமார் தலைமை தாங்கினார். ராதா கிருஷ்ணன் எம்.எல்.ஏ., ஆர்.டி.ஓ., விஷ்ணுபிரியா, நகராட்சி சேர்மன் சங்கவி முருகதாஸ், துணை சேர்மன் ராணி தண்டபாணி, நகராட்சி கமிஷனர் பானுமதி, தாசில்தார் அரவிந்தன், டி.எஸ்.பி., பாலகிருஷணன், நலப்பணிகள் இணை இயக்குனர் மணிமேகலை முன்னிலை வகித்தனர்.
மாவட்ட சுகாதார அலுவலர் பொற்கொடி வரவேற்றார். சிறப்பு விருந்தினர் அமைச்சர் கணேசன், முகாமை துவக்கி வைத்து, பயனாளிகளுக்கு 24.04 லட்சம் ரூபாய் மதிப்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கினார்.
முகாமில், அறுவை சிகிச்சை, எலும்பியல், மகளிர் மருத்துவம், நரம்பியல், பல், கண் மருத்துவம் உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகளுக்கு பரிசோதனை செய்து சிகிச்சை அளிக்கப்பட்டது.
நிகழ்ச்சியில், தி.மு.க., நகர செயலாளர் தண்டபாணி, ஒன்றிய செயலாளர் வேல்முருகன் உட்பட பலர் பங்கேற்றனர். வட்டார மருத்துவ அலுவலர் ராமநாதன் நன்றி கூறினார்.