
பண்ருட்டி: பண்ருட்டி ரோட்டரி சங்கம் சார்பில் இறந்த தொழிலதிபர் கண்கள் தானமாக வழங்கப்பட்டது.
பண்ருட்டி ரோட்டரி கண்தான சேர்மன் சண்முகம் தலைமையில் மறைந்த தொழிலதிபர் சீனுவாசன் கண்தானமாக பெற்று புதுச்சேரி அரவிந்த் மருத்துவ மனைக்கு வழங்கினர்.
இதில் தொழிலதிபர் சீனுவாசன் மகன் ஜெயபிரகாஷ், சகோதரர் ரவி, மாவட்ட தொழில் வர்த்தக சங்க செயலாளர் வீரப்பன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.


