/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ கிராமங்களில் தொழிற்சாலை: விண்ணப்பிக்க அழைப்பு கிராமங்களில் தொழிற்சாலை: விண்ணப்பிக்க அழைப்பு
கிராமங்களில் தொழிற்சாலை: விண்ணப்பிக்க அழைப்பு
கிராமங்களில் தொழிற்சாலை: விண்ணப்பிக்க அழைப்பு
கிராமங்களில் தொழிற்சாலை: விண்ணப்பிக்க அழைப்பு
ADDED : மே 26, 2025 12:54 AM
கடலுார் : கிராம ஊராட்சிகளில் தொழிற்சாலைகள் அமைக்க அனுமதி வேண்டுவோர், நேரடியாக வட்டார வளர்ச்சி அலுவலகம் மூலம் விண்ணப்பிக்கலாம் என, கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில்குமார் கூறியுள்ளார்.
அவரது செய்திக்குறிப்பு:
கடலுார் மாவட்டத்தில் உள்ள கிராம ஊராட்சிகளில் தொழிற்சாலைகள் அமைக்க அனுமதி வழங்குவதற்கு அரசாணை நிலை எண்.170, ஊரக வளர்ச்சித்துறையில் உரிய வழிகாட்டு நெறிமுறைகள் வழங்கப்பட்டுள்ளன.
எனவே, கிராம ஊராட்சிகளில் புதியதாக தொழிற்சாலை அமைப்பதற்கு சிறு மற்றும் குறு நிறுவனங்கள் நேரடியாக வட்டார வளர்ச்சி அலுவலகம் மூலமாகவும், நடுத்தர மற்றும் பெரு நிறுவனங்கள் உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) அலுவலகம் மூலமாகவும் உரிய ஆவணங்களை கலெக்டரிடம் சமர்ப்பித்து தொழிற்சாலை உரிமையாளர், பங்குதாரர்கள் அனுமதியினை பெற்றுக்கொள்ளலாம்.
இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.