Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ தரமற்ற மருந்து தயாரித்த நிறுவனத்துக்கு அபராதம்

தரமற்ற மருந்து தயாரித்த நிறுவனத்துக்கு அபராதம்

தரமற்ற மருந்து தயாரித்த நிறுவனத்துக்கு அபராதம்

தரமற்ற மருந்து தயாரித்த நிறுவனத்துக்கு அபராதம்

ADDED : செப் 15, 2025 02:08 AM


Google News
விருத்தாசலம்:தரமற்ற இருமல் மருந்து தயாரித்த ஹிமாச்சல பிரதேச மாநிலத்தில் உள்ள மருந்து நிறுவனத்துக்கு அபராதம் விதிக்கப்பட்டது.

ஹிமாச்சல பிரதேசம், நரிவாலாவில் இயங்கும் எல்.பி.ஐ.எல்., எனப்படும் எம்.எஸ்., லெபாரட்டரி பார்மாசிடிகல்ஸ் இண்டியா பிரைவேட் லிமிடெட் மருந்து ஆய்வக நிறுவனம் தயாரித்த இருமல் மருந்து தரம் குறைவாக இருப்பதாக, 2019ல் புகார் எழுந்தது.

அதன்படி, அப்போதைய கடலுார் மாவட்ட மருந்து ஆய்வாளர் பரிந்துரையின்படி, இருமல் மருந்தின் தரம் குறித்து ஆய்வக பரிசோதனை நடத்தப்பட்டதில், தரம் குறைவாக இருப்பது உறுதி செய்யப்பட்டது.

இதையடுத்து, மருந்து நிறுவனம் மற்றும் அதன் நிறுவன இயக்குநர் சஞ்சீவ் பாட்டியா, துணை தலைவர் சுனில் வஷிஸ்தா ஆகியோர் மீது விருத்தாசலம் மாஜிஸ்திரேட் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கில், மருந்து நிறுவனத்துக்கும், சுனில் வஷிஸ்தாவுக்கும், தலா, 20,000 ரூபாய் அபராதம் விதித்து, மாஜிஸ்திரேட் அரவிந்தன் உத்தரவிட்டார்.

இரண்டாவது குற்றவாளியான சஞ்சீவ் பாட்டியா இறந்ததால், அவர் மீதான வழக்கு முடித்து வைக்கப்பட்டது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us