ADDED : செப் 15, 2025 02:11 AM
விருத்தாசலம்: விருத்தாசலத்தில் இருந்து கோ.பவழங்குடி வழியாக கன்னியங்குப்பத்திற்கு அரசு டவுன் பஸ் இயக்க கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
விருத்தாசலம் அடுத்த கன்னியங்குப்பத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர். இக்கிராம மக்கள் அத்தியாவசிய தேவைக்கும், மாணவர்கள் பள்ளி கல்லுாரிக்கும் விருத்தாசலம், மங்கலம்பேட்டை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு தினசரி சென்று வருகின்ற னர். இந்நிலையில் கிராமத்திற்கென டவுன் பஸ் இயக்கப்படாததால் 4 கி.மீ., துாரம் உள்ள கோ.பூவனுார் பகுதிக்கு நடந்து சென்று பஸ் ஏறிச் செல்லும் நிலை உள்ளது. எனவே, விருத்தாசலத்தில் இருந்து கோ.பவழங்குடி வழியாக கன்னியங்குப்பத்திற்கு அரசு டவுன் பஸ் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.