ADDED : செப் 27, 2025 08:27 AM
விருத்தாசலம் : பெட்டிக்கடையில் குட்கா பதுக்கியவரை போலீசார் கைது செய்தனர்.
விருத்தாசலம் சப் இன்ஸ்பெக்டர் சந்துரு தலைமையிலான போலீசார் நேற்று காலை ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
அப்போது, பாலக்கரையில் உள்ள பெட்டிக்கடையில் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் பதுக்கி வைத்து விற்பனை செய்வது தெரிந்தது.
இது குறித்து போலீசார் வழக்குப் பதிந்து, கடை உரிமையாளர் வி.என்.ஆர்., நகர் அகமது அலி, 53; என்பவரை கைது செய்தனர்.


