ADDED : ஜன 10, 2024 12:08 AM

புவனகிரி : தமிழகத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்க மத்திய அரசை வலியுறுத்தி, இந்திய கம்யூ., சார்பில் புவனகிரியில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
புவனகிரி பாலக்கரையில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு நகர செயலாளர் ராமச்சந்திரன் தலைமை தாங்கினார்.
உறுப்பினர் கிருஷ்ணமூர்த்தி வரவேற்றார். புவனகிரி தாலுகா செயலாளர் சேகர், மாவட்ட குழு குப்புசாமி பங்கேற்று, தமிழகத்தில் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உரிய நிவாரணம் வழங்க, மத்திய அரசு நிதி வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கையை வலியுறுத்தி பேசினர்.
ஆர்ப்பாட்டத்தில் கண்ணன், பூபாலன் உள்ளிட்ட நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.
கோவிந்தன் நன்றி கூறினார்.


