குமராட்சி போலீஸ் நிலையத்தில் ஆய்வு
குமராட்சி போலீஸ் நிலையத்தில் ஆய்வு
குமராட்சி போலீஸ் நிலையத்தில் ஆய்வு
ADDED : செப் 24, 2025 06:15 AM
சிதம்பரம் : குமராட்சி சிறந்த காவல் நிலையமாக தேர்வு செய்யப்பட்டதையடுத்து, தென்னிந்திய மண்டல தலைவர் ஆய்வு மேற்கொண்டார்.
குற்ற ஆவணங்கள் ஒப்படைப்பு, உடனுக்குடன் வழக்கு பதிவு உள்ளிட்ட பல்வேறு செயல்பாடுகள் அடிப்படையில், ஆண்டு தோறும், இந்திய உள்துறை அமைச்சகம் சார்பில், இந்திய அளவில், 10 சிறந்த காவல் நிலையங்கள் தேர்வு செய்யப்படுகின்றன.
அதில், அதிகாரிகள் ஆய்வு செய்து, முதல் 3 இடங்களை பெறும் காவல் நிலையங்களை தேர்வு செய்து பட்டியல் வெளியிடுகின்றனர்.
அந்த வகையில், இந்த ஆண்டு, தேர்வு செய்யப்பட்டுள்ள 10 காவல் நிலையங்களில் கடலுார் மாவட்டம், குமராட்சி காவல் நிலையமும் அடங்கும். தற்போது, அதில் முதல் 3 இடங்களுக்கான தேர்விற்கான கவல் நிலைய ஆய்வு நடந்து வருகிறது.
அதன்படி, குமராட்சி காவல் நிலையத்தில், பிரான்ஸ்ரூரல் கன்சல்டிங் பிரைவேட் லிமிடெட் நிறுவன இயக்குனர், தென்னி ந்திய மண்டல தலைவர் டாக்டர் மேரிஅப்ரகாம் குழுவினர் ஆய்வு மேற்கொண்டனர். அதில், காவல் நிலையத்தின், நிறை, பராமரிப்பு உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் ஆய்வு செய்யப்பட்டது.
அப்போது சேத்தியாத்தோப்பு டி.எஸ்.பி., விஜிகுமார், குமராட்சி இன்ஸ்பெக்டர் தேவேந்திரன், சப் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் மற்றும் காவலர்கள் உடனிருந்தனர்.