/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ 3வது முறையாக நம்பிக்கையில்லா தீர்மானம் பேச மறுத்த நகராட்சி சேர்மன் : அமைச்சர் 'அப்ெசட்' 3வது முறையாக நம்பிக்கையில்லா தீர்மானம் பேச மறுத்த நகராட்சி சேர்மன் : அமைச்சர் 'அப்ெசட்'
3வது முறையாக நம்பிக்கையில்லா தீர்மானம் பேச மறுத்த நகராட்சி சேர்மன் : அமைச்சர் 'அப்ெசட்'
3வது முறையாக நம்பிக்கையில்லா தீர்மானம் பேச மறுத்த நகராட்சி சேர்மன் : அமைச்சர் 'அப்ெசட்'
3வது முறையாக நம்பிக்கையில்லா தீர்மானம் பேச மறுத்த நகராட்சி சேர்மன் : அமைச்சர் 'அப்ெசட்'
ADDED : செப் 24, 2025 06:02 AM
மா வட்டத்தின் கடைகோடியில் உள்ள அமைச்சர் தொகுதியில் ஆளுங்கட்சியைச் சேர்ந்த பெண் நகராட்சி சேர்மனாக இருக்கிறார். இவர் தங்களுக்கு ஒத்துழைப்பு தரவில்லை எனக்கூறி, சேர்மன் பதவி விலக நம்பிக்கையில்லா தீர்மானம் நிறைவேற்ற கவுன்சிலர்கள் மனு அளித்தனர்.
ஆளுங்கட்சியின் நகர நிர்வாகியான துணை சேர்மன், சேர்மன் முதல் நிர்வாகிகள் வரை தனது கட்டுப்பட்டில் தான் இருக்க வேண்டும் என அமைச்சருடன் நெருங்கி மற்றவர்களுக்கு அழுத்தம் கொடுத்து வருகிறார்.
இதனால் சேர்மனுக்கும், துணை சேர்மனுக்கும் பனிப்போர் முற்றி, சேர்மன் பதவியையே காலி செய்யும் முடிவுக்கு தள்ளப்பட்டது. தொடர்ந்து, கவுன்சிலர்கள் சேர்மன் பதவியை பறிக்க 2 முறை நம்பிக்கையில்லா தீர்மானம் நிறைவேற்ற மனு அளித்தார்.
இதுகுறித்து அமைச்சர் முன்னிலையில் நடந்த பஞ்சாயத்து தோல்வியில் முடிந்தது. இருந்தாலும், மீண்டும் சேர்மன் பதவியை காலி செய்ய வேண்டும் என புகைச்சல் மட்டும் தொடர்ந்து வந்தது. சில நாட்களுக்கு முன் துணை சேர்மன் உட்பட பெரும்பான்மை கவுன்சிலர்கள் சேர்ந்து 3வது முறையாக சேர்மன் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வர மனு அளித்தனர். அதில், 17 கவுன்சிலர்கள் மட்டுமே கையெழுத்திட்டிருந்தனர்.
இதுகுறித்து தகவலறிந்த அமைச்சர், இப்பிரச்னையை முடிவுக்கு கொண்டு வர நகராட்சி ஊழியர் மூலமாக சேர்மனிடம் போனில் பேச முயன்றார். ஆனால் சேர்மன், அமைச்சரிடம் பேச மறுத்து விட்டார். சேர்மன் பதவியை காலி செய்ய 3வது முறை கவுன்சிலர்கள் மனு அளித்ததால் பதவி நீடிக்குமா அல்லது முடிவுக்கு வருமா என போக போகத்தான் தெரியும்.