/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ போலீசுக்கே சவால் விடும் பெண் கொலை வழக்கு; துப்பு கிடைக்காமல் 50 நாட்களாக திணறல் போலீசுக்கே சவால் விடும் பெண் கொலை வழக்கு; துப்பு கிடைக்காமல் 50 நாட்களாக திணறல்
போலீசுக்கே சவால் விடும் பெண் கொலை வழக்கு; துப்பு கிடைக்காமல் 50 நாட்களாக திணறல்
போலீசுக்கே சவால் விடும் பெண் கொலை வழக்கு; துப்பு கிடைக்காமல் 50 நாட்களாக திணறல்
போலீசுக்கே சவால் விடும் பெண் கொலை வழக்கு; துப்பு கிடைக்காமல் 50 நாட்களாக திணறல்
ADDED : செப் 24, 2025 06:02 AM
தி ட்டக்குடி அடுத்த புதுக்குளம் கிரா மத்தை சேர்ந்தவர் செல்லம், 55; இவரது கணவர் மற்றும் இரு மகன்கள் வெளிநாட்டில் பணிபுரியும் நிலையில், செல்லம் மட்டும் தனியாக வசித்து வந்தார். இவர், கடந்த மாதம் 6ம் தேதி மதியம் 2:00 மணிக்கு வழக்கம்போல் அதே பகுதியில் உள்ள தனது வயலுக்கு சென்றார்.
மாலை 6:30 மணிக்கு அவ்வழியே சென்ற அப்பகுதி மக்கள், முகத்தில் ரத்த காயங்களுடன் கொடூரமான முறையில் செல்லம் இறந்து கிடப்பதைக்கண்டு அதிர்ச்சியடைந்து, திட்டக்குடி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலறிந்த போலீசார் உடலை மீட்டு விசாரணை நடத்தியதில், செல்லம் கொலை செய்யப்பட்டது உறுதியானது.
இவ்வழக்கு தொடர்பாக எஸ்.பி., ஜெயக்குமார் சம்பவ இடத்திற்கு 2 முறை சென்று விசாரணை நடத்தினார்.
அதே போல டி.ஐ.ஜி., 2 முறை வருகை தந்து விசாரணை நடத்தினார். அப்படியிருந்தும் இன்று வரை கொலையாளி யார் என்று கண்டறிய முடியாமல் போலீசார் திணறி வருகின்றனர்.
ஒரு சிறிய துப்புக்கூட கிடைக்காமல் இருப்பது போலீசுக்கே சவால் விடுவது போல் இவ்வழக்கு உள்ளது.