/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ தனிப்பிரிவு போலீசார் மவுனம் குற்றங்களை தடுப்பதில் தாமதம் தனிப்பிரிவு போலீசார் மவுனம் குற்றங்களை தடுப்பதில் தாமதம்
தனிப்பிரிவு போலீசார் மவுனம் குற்றங்களை தடுப்பதில் தாமதம்
தனிப்பிரிவு போலீசார் மவுனம் குற்றங்களை தடுப்பதில் தாமதம்
தனிப்பிரிவு போலீசார் மவுனம் குற்றங்களை தடுப்பதில் தாமதம்
ADDED : செப் 24, 2025 06:01 AM
க டலுார் மாவட்டத்தில், அரசால் தடை செய்யப்பட்ட போதைப்பொருட்கள், லாட்டரி, கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைக்கிறது.
இதுகுறித்து உடனுக்குடன் எஸ்.பி., க்கு தகவல் கூறும் தனிப்பிரிவு போலீசார், உள்ளூர் போலீஸ் ஸ்டேஷனில் உள்ள போலீசாரோடு கைகோர்த்து சென்று விடுகின்றனர்.
சிதம்பரத்தில் பிரபல லாட்டரி வியாபாரிக்கு ஆதரவாக செயல்பட்ட போலீசார், எஸ்.பி., ஜெயக்குமாரின் அதிரடி நடவடிக்கையால் கூண்டோடு இடமாற்றம் செய்யப்பட்டனர்.
அதே போன்று, எஸ்.பி.,க்கு நேரிடையாக கிடைத்த தகவலின் பேரில், குறிஞ்சிப்பாடி, கடலுார், பரங்கிப்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் லாட்டரி சீட்டு, குட்கா, கஞ்சா விற்பனை செய்த வியாபாரிகளை போலீசார் கைது செய்தனர்.
லாட்டரி சீட்டு, குட்கா, கஞ்சா விற்பனை தனிப்பிரிவு போலீசாருக்கு தெரியாமல் நடக்க ஒரு சதவீதம் கூட வாய்ப்பில்லை.
பல வழக்குகளில் முச்சுவிடாமல் மூடி மறைக்க துணைபோகும் தனிப்பிரிவு போலீசார் மீது எஸ்.பி., நடவடிக்கை எடுத்து வருகிறார்.
இருப்பினும் ஒரு சில போலீசார், குற்ற சம்பவங்கள் குறித்து தகவல் தெரிவிப்பதில்லை.
இனிமேலாவது தனிப்பிரிவு போலீசார், பணியில் கவனம் செலுத்துவார்களா என்பது போகப்போகத்தான் தெரியும்.