/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ பெயரளவில் குளம் துார் வாரும் பணி கொளப்பாக்கம் கிராம மக்கள் அதிருப்தி பெயரளவில் குளம் துார் வாரும் பணி கொளப்பாக்கம் கிராம மக்கள் அதிருப்தி
பெயரளவில் குளம் துார் வாரும் பணி கொளப்பாக்கம் கிராம மக்கள் அதிருப்தி
பெயரளவில் குளம் துார் வாரும் பணி கொளப்பாக்கம் கிராம மக்கள் அதிருப்தி
பெயரளவில் குளம் துார் வாரும் பணி கொளப்பாக்கம் கிராம மக்கள் அதிருப்தி
ADDED : செப் 24, 2025 06:01 AM

க ம்மாபுரம் ஒன்றியம், ஊ.கொளப்பாக்கம் கிராமத்தில் ஆயிரக்கணக்கானோர் வசிக்கின்றனர். இங்குள்ள நல்ல தண்ணீர் குளத்தில் பொதுமக்கள் அத்தியாவசிய தேவைக்கும், கால்நடைகள் குடிநீர் வசதி பெற்றன. நாளடைவில் குளம் துார்ந்து முழு கொள்ளளவு நீர்ப்பிடிப்ட எட்ட முடியவில்லை.
இதனால் நீர்மட்டம் வெகுவாக சரிந்து, கிராமத்தில் போர்வெல் செயல்பாடு குறைந்தது. பொது மக்களுக்கு குடிநீர் தட்டுப்பாடு அபாயம் ஏற்பட்டது. இதை தவிர்க்கும் வகையில் 15வது வார்டு முன்னாள் கவுன்சிலர் கிரகோரி மேற்கொண்ட முயற்சி காரணமாக என்.எல்.சி., சமூக பொறுப்புணர்வு திட்டத்தில் குளத்தை துார்வார 47 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டது.
கடந்த மூன்று மாதங்களுக்கு முன் பணிகள் துவங்கியது. ஆனால், குளத்தை முறையாக துார்வாரவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அதுபோல், குளத்திற்கு தண்ணீர் வரத்துக்கு வடிகால், சுற்றிலும் கரைகள், முறையாக படிக்கட்டுகள் அமைக்கப்படாமல் கண்துடைப்பாக பணிகள் நடந்துள்ளதாக கிராம மக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.
இது குறித்து முன்னாள் கவுன்சிலர் கிரகோரி கூறுகையில், 'ஐந்து ஆண்டுகள் போராடி என்.எல்.சி., நிர்வாகத்திடம் 47 லட்சம் நிதியை பெற்றேன்.
ஆனால், துார்வாரும் பணி முறையாக நடக்கவில்லை. கரையை பலப்படுத்தாமல், வடிகால் வசதி ஏற்படுத்தாமல் கண்துடைப்பாக பணிகள் முடிந்துள்ளன.
இதற்குரிய பணியாணை, ஒப்பந்த பணிகளை யார் மேற்கொண்டு வருகிறார்கள் என்ற விபரமும் கம்மாபுரம் ஒன்றிய அதிகாரிகளுக்கு தெரியவில்லை. எனவே, என்.எல்.சி., சமூக பொறுப்புணர்வு திட்ட அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்து, கிராம மக்கள் பயன்பெறும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்றார்.