/உள்ளூர் செய்திகள்/தர்மபுரி/ தர்மபுரி தி.மு.க., - எம்.பி., பொதுமக்களுக்கு நன்றி தர்மபுரி தி.மு.க., - எம்.பி., பொதுமக்களுக்கு நன்றி
தர்மபுரி தி.மு.க., - எம்.பி., பொதுமக்களுக்கு நன்றி
தர்மபுரி தி.மு.க., - எம்.பி., பொதுமக்களுக்கு நன்றி
தர்மபுரி தி.மு.க., - எம்.பி., பொதுமக்களுக்கு நன்றி
ADDED : ஜூலை 17, 2024 02:39 AM
தர்மபுரி;தர்மபுரியில், லோக்சபா தேர்தலில் ஓட்டளித்த மக்களுக்கு, தி.மு.க., - எம்.பி., மணி நேற்று நன்றி தெரிவித்தார்.
தர்மபுரி லோக்சபா தேர்தலில், தி.மு.க., சார்பில் போட்டியிட்ட மணி வெற்றி பெற்றார். அவர், ஓட்டளித்த மக்களுக்கு மாவட்டம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து நன்றி தெரிவித்து வருகிறார். அதன்படி நேற்று, தர்மபுரி மாவட்டம் நல்லம்பள்ளி அடுத்த லளிகம், மிட்டாநுாலஹள்ளி, முக்கல்நாயக்கன்பட்டி, நார்த்தம்பட்டி, குட்டூர், நல்லம்பள்ளி உள்ளிட்ட பகுதிகளில் மக்களுக்கு நன்றி தெரிவித்தார். தொடர்ந்து, சாலை மற்றும் சந்தைகளில் இருந்த பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினார். அப்போது, தர்மபுரி, தி.மு.க., கிழக்கு மாவட்ட செயலாளர் தடங்கம் சுப்பிரமணி, ஒன்றிய செயலாளர் சண்முகம்
உடனிருந்தனர்.