Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/தர்மபுரி/ மனிதாபிமானத்தோடு கூறியும் மனசாட்சியின்றி வாகனம் ஓட்டுகிறீர்கள்; போலீசார் வேதனை

மனிதாபிமானத்தோடு கூறியும் மனசாட்சியின்றி வாகனம் ஓட்டுகிறீர்கள்; போலீசார் வேதனை

மனிதாபிமானத்தோடு கூறியும் மனசாட்சியின்றி வாகனம் ஓட்டுகிறீர்கள்; போலீசார் வேதனை

மனிதாபிமானத்தோடு கூறியும் மனசாட்சியின்றி வாகனம் ஓட்டுகிறீர்கள்; போலீசார் வேதனை

ADDED : ஜூலை 17, 2024 02:40 AM


Google News
அரூர்:தர்மபுரி மாவட்டம், அரூர் மற்றும் சுற்று வட்டாரத்தில், இருசக்கர வாகனங்களில் செல்லும் பெரும்பாலானோர், ஹெல்மெட் அணியாமல் சர்வ சாதாரணமாக செல்வது வாடிக்கையாக உள்ளது. இதனால், விபத்து ஏற்படும்போது உயிரிழப்பு ஏற்படுகிறது. இதை தடுக்க, அரூரில் போக்குவரத்து போலீசார், வர்ணதீர்த்தம், கச்சேரிமேடு, நான்கு ரோடு உள்ளிட்ட இடங்களில் இருசக்கர வாகனங்களில் செல்வோரை நிறுத்தி, சாலை விதிகளை கண்டிப்பாக கடைப்பிடிக்க அறிவுரை வழங்கி வருகின்றனர்.

நேற்று காலை, 10:45 மணிக்கு அரூர் வர்ணதீர்த்தத்தில் இருசக்கர வாகனங்களில் செல்வோரை நிறுத்திய போக்குவரத்து போலீசார், 'ஹெல்மெட் அணிய வலியுறுத்தியும் யாரும் அணிவதில்லை. பெரும்பாலானோர் வாகனத்திற்கு இன்ஸ்சூரன்ஸ் மற்றும் ஓட்டுனர் உரிமமும் பெறாமல் உள்ளனர். நாங்கள் பல மாதங்களாக கத்திக் கொண்டுள்ளோம். குடிபோதையில் வாகனம் ஓட்டினால், 10,000 ரூபாய் அபராதம் விதிக்க வேண்டும். அவருடன் அமர்ந்து செல்பவருக்கும் அபராதம் விதிக்க வேண்டும். ஹெல்மெட் அணியாதது, ஓட்டுனர் உரிமம் இல்லாததது என, நாள் ஒன்றுக்கு, 50 வழக்கு போட வேண்டும். ஒரு லட்சம் ரூபாய் கொடுத்து வாகனம் வாங்கிறீங்க, 300 ரூபாய் கொடுத்து ஹெல்மெட் வாங்க கணக்கு பாக்கறீங்க, நாங்க உங்களிடம் மனிதாபிமானத்தோடு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறோம். ஆனால், நீங்கள் மனசாட்சியே இல்லாமல், சாலையில் வாகனம் ஓட்டுகிறீர்கள். இரண்டொரு நாளில் வாகனங்களை சோதனை செய்ய போகின்றனர். அப்போது, அனைத்து ஆவணங்களும் சரியாக வைத்திருக்க வேண்டும்' என, அறிவுறுத்தி அனுப்பினர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us