/உள்ளூர் செய்திகள்/தர்மபுரி/ பழங்குடியின மாணவனை தாக்கிய 17 பேர் கைது பழங்குடியின மாணவனை தாக்கிய 17 பேர் கைது
பழங்குடியின மாணவனை தாக்கிய 17 பேர் கைது
பழங்குடியின மாணவனை தாக்கிய 17 பேர் கைது
பழங்குடியின மாணவனை தாக்கிய 17 பேர் கைது
ADDED : செப் 20, 2025 03:43 AM
அதியமான்கோட்டை:அரசு மாணவர் தங்கும் விடுதியில், மாணவனை தாக்கிய விவகாரத்தில், மூன்று சிறுவர்கள் உட்பட, 17 மாணவர்களை போலீசார் நேற்று கைது செய்தனர்.
திருப்பத்துார் மாவட்டம், ஜவ்வாதுமலை கிராமத்தை சேர்ந்தவர் திருவரசன், 22. மலைவாழ் மக்கள் - எஸ்.டி., சமுதாயத்தை சேர்ந்த இவர், தர்மபுரி அருகே ஒட்டப்பட்டி யில் உள்ள அம்பேத்கர் அரசு மாணவர் தங்கும் விடுதியில் தங்கி, தர்மபுரி அரசு கலை கல்லுாரியில் பி.எஸ்.சி., கணிதவியல், மூன்றாம் ஆண்டு படித்து வருகிறார்.
இந்நிலையில், செப்., 17 இரவு, 11:00 மணிக்கு திருவரசன் தங்கியிருந்த அறையில் இருந்த மற்றொரு மாணவன், தன் மொபைல்போனின் ஹெட்போன் காணாமல் போனதாக கூறி, அதே விடுதியில் தங்கி படிக்கும், 19 மாணவர்கள் சேர்ந்து, திருவரசனை அறையில் அடைத்து வைத்து, விடிய விடிய அடித்து துன்புறுத்தியதுடன், அதை வீடியோ பதிவு செய்துள்ளனர்.
திருவரசன் புகாரின்படி, அவரை துன்புறுத்திய விவகாரத்தில், மூன்று சிறுவர்கள் உட்பட, 17 மாணவர்களை வன்கொடுமை தடுப்பு சட்டத்தில், போலீசார் நேற்று கைது செய்தனர். இதில், தலைமறைவான இரு மாணவர்களை அதியமான்கோட்டை போலீசார் தேடி வருகின்றனர்.