/உள்ளூர் செய்திகள்/தர்மபுரி/ ரயில் பயணியிடம் 33 பவுன் நகையை திருடியவர் கைது ரயில் பயணியிடம் 33 பவுன் நகையை திருடியவர் கைது
ரயில் பயணியிடம் 33 பவுன் நகையை திருடியவர் கைது
ரயில் பயணியிடம் 33 பவுன் நகையை திருடியவர் கைது
ரயில் பயணியிடம் 33 பவுன் நகையை திருடியவர் கைது
ADDED : செப் 20, 2025 02:01 AM
தர்மபுரி, கர்நாடக மாநிலம், பெங்களூருவை சேர்ந்த ராஜலட்சுமி, 52, கடந்த, 11 இரவு, 8:00 மணிக்கு துாத்துக்குடி -- மைசூர் எக்ஸ்பிரஸ் ரயிலில் மதுரையிலிருந்து பெங்களுருக்கு புறப்பட்டார்.
அவரது உடமைகளை இருக்கைக்கு அடியில் வைத்துவிட்டு, நகைகள் வைத்திருந்த கைப்பையை தலைக்கு அடியில் வைத்துக் கொண்டு துாங்கினார். மறுநாள் அதிகாலை, 3:30 மணிக்கு பார்த்தபோது, தலைக்கு அடியில் வைத்திருந்த கைப்பை மற்றும் அதிலிருந்த, 33 பவுன் நகைகள் மாயமானது தெரியவந்தது.
இது குறித்து, ராஜலட்சுமி தர்ம புரி ரயில்வே போலீசில் புகார் அளித்தார். போலீசார் விசாரணை மேற்கொண்டு ரயில் முன்பதிவு விவரம், ரயில்வே ஸ்டேஷன் 'சிசிடிவி' கேமரா பதிவுகளை வைத்து, சேலம் வட்ட ரயில்வே இன்ஸ்பெக்டர் சிவசெந்தில்குமார் தலைமையில் தனிப்படை அமைத்து விசாரித்தனர். இதில், தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு கமால்தெருவை சேர்ந்த முகமது அவேஸ், 19, என்பவர் திருட்டில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து அவரை, ரயில்வே போலீசார் நேற்று அவரை கைது செய்தனர்.