/உள்ளூர் செய்திகள்/தர்மபுரி/ காரில் 100 கிலோ கஞ்சா கடத்திய 3 பேர் கைது காரில் 100 கிலோ கஞ்சா கடத்திய 3 பேர் கைது
காரில் 100 கிலோ கஞ்சா கடத்திய 3 பேர் கைது
காரில் 100 கிலோ கஞ்சா கடத்திய 3 பேர் கைது
காரில் 100 கிலோ கஞ்சா கடத்திய 3 பேர் கைது
ADDED : செப் 26, 2025 02:09 AM
கிருஷ்ணகிரி :ஆந்திர மாநிலத்திலிருந்து, கிருஷ்ணகிரி வழியாக காரில், 100 கிலோ கஞ்சா கடத்திய, 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
கிருஷ்ணகிரி மாவட்ட எஸ்.பி., தங்கதுரைக்கு கிடைத்த ரகசிய தகவல் படி, கிருஷ்ணகிரி மது விலக்கு அமல் பிரிவு இன்ஸ்பெக்டர் பிரகாஷ் மற்றும் போலீசார் நேற்று காலை குருவிநாயனப்பள்ளி சோதனைச்சாவடி அருகே வாகன சோதனை நடத்தினர். அப்போது டாடா சுமோ கார் ஒன்று வந்தது. அதை போலீசார் நிறுத்தி விசாரித்தனர். அப்போது அவர்கள் முன்னுக்கு பின் முரணாக பதில் கூறவே, சந்தேகமடைந்த போலீசார் காரை சோதனை செய்தனர்.
காருக்குள் தலா, 2 கிலோ வீதம் மொத்தம், 50 பொட்டலங்களில், 100 கிலோ கஞ்சா கடத்த முயன்றது தெரிந்தது. அவர்கள் ஆந்திர மாநிலம், கடப்பள்ளியை சேர்ந்த வேணுகோபால், 29, ஹரிகிருஷ்ணா, 26 மற்றும் மதுரை அய்யம்பட்டியை சேர்ந்த வெள்ளைபாண்டி, 46 என தெரிந்தது. அவர்கள் மூவரையும், போலீசார் கைது செய்தனர். ஒடிசா மாநிலத்திலிருந்து கஞ்சாவை மொத்தமாக வாங்கி ரயில் மூலம் ஆந்திராவுக்கு எடுத்து வந்ததும், அங்கிருந்து தமிழகம், கர்நாடகாவுக்கு பிரித்து அனுப்ப முயன்றதும், 100 கிலோவை திருச்சிக்கு கடத்தியபோது சிக்கியதும் விசாரணையில் தெரிந்தது.
மேலும், சாமல்பட்டி ரயில்வே ஸ்டேஷன் அருகே கேட்பாரற்று கிடந்த, 16 கிலோ கஞ்சா பண்டலையும் போலீசார் கைப்பற்றினர்.