/உள்ளூர் செய்திகள்/தர்மபுரி/ 25 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஊரக வளர்ச்சித்துறை ஆர்ப்பாட்டம் 25 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஊரக வளர்ச்சித்துறை ஆர்ப்பாட்டம்
25 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஊரக வளர்ச்சித்துறை ஆர்ப்பாட்டம்
25 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஊரக வளர்ச்சித்துறை ஆர்ப்பாட்டம்
25 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஊரக வளர்ச்சித்துறை ஆர்ப்பாட்டம்
ADDED : செப் 26, 2025 02:10 AM
தர்மபுரி :தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர் சங்கத்தின் சார்பில், 25 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, தர்மபுரி கலெக்டர் அலுவலகம் முன், ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட தலைவர் முகமது இலியாஸ் தலைமை வகித்தார். மாநில தலைவர் இளங்குமரன், மாவட்ட செயலாளர் தருமன், பொருளாளர் வினோத்குமார், மாநில செயற்குழு உறுப்பினர் பிரின்ஸ், தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் தெய்வானை ஆகியோர் பேசினார்.
ஆர்ப்பாட்டத்தில், ஊரக வளர்ச்சித்துறையில் காலியாக உள்ளிட்ட, 1500க்கும் மேற்பட்ட ஊராட்சி செயலாளர் பணியிடங்கள் மற்றும் ஓட்டுனர், பதிவறை எழுத்தர், அலுவலக உதவியாளர், இரவு காவலர் உள்ளிட்ட அனைத்து பணியிடங்களையும் உடனே நிரப்ப வேண்டும். ஊராட்சி செயலாளர்களுக்கு சிறப்பு நிலை, தேர்வு நிலை, வரையறுக்கப்பட்ட ஓய்வூதியம், மருத்துவ விடுப்பு, ஈட்டிய விடுப்பு உள்ளிட்ட விடுபட்ட உரிமைகளை வழங்க வேண்டும். கூடுதல் பொறுப்பு வகிக்கும் ஊராட்சிகளுக்கு கூடுதல் பொறுப்புப் படியை உயர்த்தி வழங்க வேண்டும். 25 ஆண்டுகளுக்கும் மேலாக, ஊராட்சி செயலர்களாக பணிபுரிந்து பதவி உயர்வு பெற்று புதிய ஓய்வூதிய திட்டத்தில் ஓய்வுபெற்ற பணியாளர்களுக்கு ஊராட்சி செயலர் பதவிக்கான சிறப்பு ஓய்வூதியம் வழங்க வேண்டும்.
தமிழக முதல்வரின் சட்டசபை தேர்தல் வாக்குறுதிகளில் ஒன்றான புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து, ஊராட்சி செயலர் உள்ளிட்ட அனைவருக்கும் பயனளிக்கும் பழைய ஒய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட, 25 அம்ச கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.